சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா


சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா
x

சொக்கநாத சுவாமி கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

விருதுநகர்


விருதுநகரில் பழமை வாய்ந்த மீனாட்சி, சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமி, அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவினை முன்னிட்டு தினமும் அன்னம், குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. 28-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகின்றது. வருகிற 31-ந் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பிரம்மோற்சவ அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.


Next Story