ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில்ஆவணி மாத பவுர்ணமி பூஜை


ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில்ஆவணி மாத பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 12 Sept 2022 12:30 AM IST (Updated: 12 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் ராகு கேது அதர்வண பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு மூலவர் பிரத்தியங்கரா தேவி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அதேபோல் மகா கால பைரவர் மற்றும் ராகு, கேது ஆகிய தெய்வங்களுக்கும் தனி சன்னதி உண்டு. இந்த கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இதில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல ராகு, கேது, மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.


Next Story