"ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான கார்கள், திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர் பாலு, மநீம தலைவர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், அவரது மகன் குகன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சிவக்குமார், பாடலாசிரியர் வைரமுத்து, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





Next Story