கோடங்கிபட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
கோடங்கிபட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 'அவார்டு டே ' என்ற நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் 2022-23 கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 5-ம் வகுப்பு மாணவி தனஸ்ரீ, 4-ம் வகுப்பு மாணவன் மாசிலாமணி ஆகியோருக்கு சிறந்த மாணவர் மற்றும் சீர்மிகு மாணவர் என்ற விருது வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சர்மிளா மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் வட்டாரக் கல்வி அலுவலருக்கு நினைவுப் பரிசை வழங்கினார். முடிவில் பள்ளி ஆசிரியை சத்தியா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story