பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்


பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித் துள்ளார்.

கள்ளக்குறிச்சி

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாரம்பரிய காய்கறி சாகுபடி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிசாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளது. சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறையான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விருது பெறுபவர்களுக்கு பரிசு

இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 15 ஆயிரமும், 2-ம் பரிசு ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

அல்லது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் வருகிற 30-ந் தேதிக்குள்(சனிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான கள்ளக்குறிச்சி உமா-8098327732, சின்னசேலம் முருகன்-9787863135, சங்கராபுரம் சத்தியராஜ்-9524737498, ரிஷிவந்தியம் கே.முருகன்-9688940083, திருக்கோவிலூர் சக்திவேல்-7811967632, திருநாவலூர் முரளி- 9976196911, தியாகதுருகம் சொர்ணம்-8903555527, உளுந்தூர்பேட்டை விஜயலட்சுமி-9894142635, வெள்ளிமலை வாமலை-9787237797 ஆகியோரை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை நேரில் அணுகியும் பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story