சித்தராமைய்யா உள்ளிட்ட 7 பேருக்கு விருது - தொல்.திருமாவளவன் வழங்கினார்


சித்தராமைய்யா உள்ளிட்ட 7 பேருக்கு விருது - தொல்.திருமாவளவன் வழங்கினார்
x

கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமைய்யா உள்ளிட்ட 7 பேருக்கு விருதுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் வழங்கினார்.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடப்பாண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். இந்த விழாவில் அம்பேத்கர் விருது கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவரான சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் பேசியதாவது,

ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் 6 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு புதிதாக 'மார்க்ஸ் மாமணி' என்ற புதிய விருது மறைந்த எழுத்தாளர் ஜவகருக்கு வழங்கப்படுகிறது. மறைந்த பின்னர் வழங்கும் மரபு என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. சமுதாய மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல்பட்ட அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமை கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story