10, 12-ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு


10, 12-ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
x

10, 12-ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அல் இக்ஸான் பெடரேசன் சார்பில், கடையநல்லூர் நகரில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நாகூர் மீரான் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கல்வி குழு உறுப்பினர் யூசுப் ஹசன் இறை வசனம் ஓதினார் துணைத் தலைவர் முகைதீன் வரவேற்றார்.

தமிழ் ஆசிரியர் முஹைதீன் பிள்ளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இஸ்லாமிய இலக்கிய கழக செயலாளர் இப்ராஹிம் மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். கல்வி குழு உறுப்பினர் மஹபூப் நன்றி கூறினார்.

1 More update

Next Story