போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

பள்ளிபாளையம் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அரசு பெண்கள் கிருஷ்ணவேணி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் போதை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் ஆவாரங்காடு, பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம், காவேரி சாலை ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவாக பள்ளியில் முடிவடைந்தது. இதில் மாணவிகள் போதை ஒழிப்போம், போதைப்பொருளை தடுப்போம், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாலாஜி, ஈஸ்வரன், முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story