கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
வேளாண்மை துறை திட்டங்களை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள மைக்கல் பட்டினம் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை திட்டங்களை நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாஸ்கர மணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் குழந்தை தெரேஸ் சிங்கராயர் முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் வரவேற்றார்.
பின்னர் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், பிரசன்னா, கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் முனியசாமி செய்திருந்தார்.
Related Tags :
Next Story