உலக சுகாதார தின விழிப்புணர்வு
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நடைபெற்றது.
மோகனூர்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் அமைப்போடு இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். உலக சுகாதார நிறுவனத்தின் 75-வது ஆண்டையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறு மனித சங்கிலி அமைத்து உலக சுகாதார தினத்தில் உறுதிமொழி ஏற்றனர். தூய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட செயலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ரெட் கிராஸ் மாவட்டத் தலைவர் மாதையன் நலப் பெட்டகம் வழங்கினா். மேலும் கோகுல்நாதா இயற்கை மருத்துவமனை மருத்துவ குழுவினர், கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு இயற்கை மருத்துவம் குறித்த ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர பாண்டியன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சேகர், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.