'ஹெல்மெட்' விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x

நாமக்கல்லில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் போக்குவரத்து போலீசார் நேற்று உழவர்சந்தை அருகே 'ஹெல்மெட்' விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமை தாங்கினார். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னதாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.


Next Story