அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
x

நாமக்கல்லில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடைபெற்றது.

நாமக்கல்

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து விளக்கிக் கூறினர். மேலும் பொதுமக்களுக்கு அரசு பள்ளி செயல்பாடுகளின் விவரங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே விழிப்புணர்வு பிரசார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story