மின்னணு தராசுகள் முத்திரையிடும் முகாம் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம்


மின்னணு தராசுகள் முத்திரையிடும் முகாம்  வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம்
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு தராசுகள் முத்திரையிடும் முகாம் தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி

தொழிலாளர் துறை சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்டமுறை எடையளவுகள் மின்னணு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும் மற்றும் மேஜை தராசுகள், விட்ட தராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் பரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். அரசு விதிப்படி அவ்வாறு முத்திரை இல்லாமல் வணிகர்கள் எடை அளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு தொழிலாளர் துறை சார்பில் ரூ.5 ஆயிரம் வரை அபதாரம் விதிக்க நேரிடும்.

இந்நிலையில் சிங்கம்புணரி வணிகர் நல சங்கம் சார்பில் சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள வணிகர்கள் பயனடையும் வகையில் வணிகர்களின் நலனுக்காக சிவகங்கை முத்திரை ஆய்வாளரால் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் வளாகத்தில் எடை அளவுகள் முத்திரையிடும் முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வணிகர் நல சங்க தலைவர் வாசு, துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் சிவக்குமார், செயலாளர் திருமாறன் ஆகியோர் தலைமையில் சிங்கம்புணரி பகுதியில் உள்ள பெரிய கடை வீதி, திண்டுக்கல், காரைக்குடி சாலை பகுதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் வாரச்சந்தை பகுதியில் உள்ள வணிகர்களுக்கு எடை அளவு முத்திரையிடும் முகாம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story