உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள்
உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
காரைக்குடி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை, கல்லல் மாணவ, மாணவிகள் குழு சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு போட்டிகள் கல்லலில் நடைபெற்றது. கல்லல் கிளை தலைவர் ராம்மோகன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பிரபு வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி புகையிலை எதிர்ப்பு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதல் இடத்தை மாணவி தனிஷாவும், 2-வது இடத்தை மாணவி கவிபாரதியும், 3-வது இடத்தை மாணவர் ராஜகணபதியும் பெற்றனர். மேலும் கட்டுரை போட்டியில் மாணவி விஷாலினி சிறப்பு பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழை கல்லல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை, கல்லல் தலைமை காவலர் திலிப்குமார், மாணவர் குழு ஒருங்கிணைப்பாளர் மருதநாயகம், ஆனந்தி, கவிதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் நாகரெத்தினம் நன்றி கூறினார்.