பனை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பனை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பனை தொழிலாளர்களுக்கு அரசு மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் பனை தொழிலாளர்களுக்கு அரசு மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நரிப்பையூர் ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் தமிழன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் பிரதீப் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர் கலாவதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் பனை பொருட்கள் உற்பத்தி, நவீன பனங்கற்கண்டு தயாரித்தல், கருப்பட்டி தயாரித்தல், புதிய தொழில் தொடங்குவோர், செய்யும் தொழிலை மேம்படுத்துதல், உற்பத்தி தொழில் செய்தல் வியாபாரம், வாகன கடன், கால்நடை வளர்த்தல், மீன் வியாபாரம், மீன் பதப்படுத்துதல், மீன்பிடி உபகரணங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் எவ்வாறு கடன் பெறுவது? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பனை தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story