விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு


விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு
x

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

கரூர்

கரூரில், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை தேசிய பசுமை படை சார்பில் மாசில்லா பசுமை வழியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அந்த துண்டு பிரசுரத்தில், களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக், தெர்மாகோல், ரங்கோலி ஸ்டிக்கர் இவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும், சிலைகள், பூஜை பொருட்கள், மாலைகள் வாங்குவதற்கு மறுபயன்பாட்டு பைகள், துணிப்பைகள், சணல் பைகள் இவற்றை பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்று இருந்தது.


Next Story