வால்பாறை நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு

வால்பாறை நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு
வால்பாறை
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது சுகாதாரம் குறித்தும் தூய்மை பணிகள் குறித்தும், என் குப்பை எனது பொறுப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணியில் பொது மக்களையும் பொது அமைப்பை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய வகை கொரோனா பரவி வரும் நேற்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையில் வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி உறுப்பினர்கள் வால்பாறை நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை பகுதியை தூய்மை செய்து கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தையும் தூய்மை செய்தனர். நகராட்சி மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, முகக்கவசம் அணிவது, குப்பைகளை தெருவில் கொட்டுவதை தவிர்ப்பது, கொரோனா தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள்.