டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு


டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு
x

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடந்தது.

கரூர்

தோகைமலை ஒன்றியம், கீழவெளியூர் அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுடலைமணி, சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுச்சாமி, மகேஸ்வரன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, தண்ணீர் பேரல், சாக்கடைகளில் தண்ணீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், சளி, இருமல் லேசான காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில், சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story