பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு
நெமிலியில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏரி, குளம், குட்டைகளில் யாராவது மூழ்கிவிட்டால் அவர்களை எவ்வாறு மீட்பது, மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அங்கிருந்து தப்பிக்கவேண்டும் என்பது குறித்தும், மழை வெள்ள காலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருக்கக்கோரியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story