ஆனைகட்டி மலைக்கிராமங்களில் அரசு பள்ளிகளில் போக்சோ குறித்த விழிப்புணர்வு

ஆனைகட்டி மலைக்கிராமங்களில் அரசு பள்ளிகளில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
துடியலூர்
கோவையைஅடுத்த ஆனைகட்டி மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பாக போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 24, வீரபாண்டி பஞ்சாயத்து மற்றும் 22-நஞ்சுண்டாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆணைகட்டி, கொண்டனூர், பணபள்ளி வரப்பாளையம், ராமநாதபுரம், ஆகிய அரசுபள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், மாணவ, மாணவிகள் நெருங்கிய உறவினர்களை தவிர மற்றவர்கள் அழைத்து செல்லக் அனுமதிக்க கூடாது. அறிமுகம் இல்லாதவரிடம் பேச வேண்டாம். பள்ளிக்கு சென்ற பின் வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டுக்கு செல்ல வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் தெரிந்தால் பெற்றோர் அல்லது அருகில் உள்ள ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவ,மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குரு மற்றும் போலீசார், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






