புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு


புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
x

புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் புகையிலை தடுப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதரத்துறை திட்ட உதவி அலுவலர் டாக்டர் கலைமணி, மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஆலோசகர் டாக்டர் வனிதா, மாவட்ட துணை சுகாதார செயலரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் மாணவ-மாணவிகளிடையே புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர். இதில் இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வரலாற்றுத்துறை தலைவரும், கவுரவ விரிவுரையாளரும், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலருமான செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவ செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.


Next Story