மஞ்சப்பை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பொள்ளாச்சி நகராட்சி மூலம் மஞ்சப்பை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி பொது சுகாதார பிரிவு சார்பில் ஜோதி நகரில் உள்ள ருக்குமணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அபாயம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் பெற்றோரிடம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என்றும், மஞ்சப்பை குறித்த நன்மைகள் குறித்தும் அதிகாரிகள் பேசினார்கள். விழாவில் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி, நகர்நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.