பொன்னேரி மீன்வளக்கல்லூரியில் வண்ண மீன்கள் உற்பத்திக்கான விழிப்புணர்வு முகாம்


பொன்னேரி மீன்வளக்கல்லூரியில் வண்ண மீன்கள் உற்பத்திக்கான விழிப்புணர்வு முகாம்
x

பொன்னேரி மீன்வளக்கல்லூரியில் வண்ண மீன்கள் உற்பத்திக்கான விழிப்புணர்வு முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

தமிழகத்தில் வண்ண மீன்கள் வளர்ப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு இன வண்ண மீன்களை வளர்த்து தமிழகம் முழுவதும் உற்பத்தியை பெருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தை தமிழ்நாடு டாக்டர்.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் மூலம் இயங்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நம்நாட்டு இன வண்ண மீன்கள் வளர்ப்பு திட்டத்தினை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் பொன்னேரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அகிலன் அனைவரையும் வரவேற்றார். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டிஜே.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் தமிழக அரசின் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி விழிப்புணர்வு பயிற்சி முகாமையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பண்ணையில் திலேப்பியா மீன்குஞ்சுகளை விட்டார். இதனை தொடர்ந்து மத்திய மீன்வளத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களுக்கு பழுதான என்ஜினுக்கு பதிலாக புதிய என்ஜின்கள் வாங்கி கொள்ள தலா ரூ.79 ஆயிரத்துக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார். அப்போது மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து வண்ண மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் 30 விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த வகையில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story