நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்


நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
x

பனைக்குளத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சங்கத்தின் சார்பில் மத்திய அரசு உயிர் தொழில்நுட்பவியல் துறை திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் பனைக்குளம் பஸ் நிறுத்தம் அருகில் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் வேலூரில் உள்ள வேலூர் தொழில்நுட்பம் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக மேனாள் விரிவாக்க கல்வி இயக்குனர், பேராசிரியர், டாக்டர் சுதீப்குமார். வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருமான டாக்டர் பால் மான்சிங், வேளாண் பேராசிரியர் சத்தியவேலு, திட்ட துணை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் மகாலட்சுமி, டாக்டர் சந்தீப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோழி வளர்ப்பு பற்றிய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை ராமநாதபுரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் பனைக்குளம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த செய்குல் அக்பர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஜய லிங்கம் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணையாளர்களின் தற்போதைய நிலைப்பாடும் மேம்பாட்டுக்கான கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் என்ற தலைப்பில் தொழில்நுட்ப உரையாற்றினார். இத்திட்டத்தின் களப்பணியாளர் நவீன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story