தூய்மை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு போட்டி:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
தூய்மை இயக்கம் சார்பில் நடந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகராட்சி பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டு கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தலை பற்றியும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும், மஞ்சப்பை பயன்படுத்துமாறு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை வழங்க வலியுறுத்தி பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, சிறந்த வாசகங்கள் எழுதுதல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு நகரமன்ற தலைவர் கருணாநிதி பரிசுகள் வழங்கி பாராட்டு சான்று வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் ஆரியங்காவு, கண்ணன் மற்றும் தூய்மை இந்திய திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story