விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டதன் 92-ம் ஆண்டு நிறைவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடியில் பொறியாளராக இருந்த எஸ்.வி. கனகசபை பிள்ளை என்பவர் இந்தியாவின் முதல் நடமாடும் நூலகத்தை மாட்டுவண்டியில் 1931-ம் ஆண்டு தொடங்கினார். இந்த நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டதன் 92-ம் ஆண்டு நிறைவையொட்டி மன்னார்குடி கிளை நூலகத்திலிருந்து மேலவாசல் கிராமத்திற்கு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய மேல்நிலைப்பள்ளி பின்லே மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 100 பேர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட வாசிப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் செய்திருந்தார்.


Next Story