சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு


சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 19 Jun 2023 1:15 AM IST (Updated: 19 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை நாட்களில் சமவெளிப் பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு களிக்க வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் கோத்தகிரி போக்குவரத்து போலீசார் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சக்கத்தா மாரியம்மன் கோவில் அருகே அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் பதி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதிவேகத்தில் அல்லது குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது என்றார். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், பிலிப் சார்லஸ், பாலசுப்பிரமணி, சிவகுமார் ஆகியோர் கோத்தகிரி நகரின் பிற பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Next Story