நம் கல்வி-நம் உரிமை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


நம் கல்வி-நம் உரிமை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x

நம் கல்வி-நம் உரிமை குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தஞ்சாவூர்

நம் கல்வி-நம் உரிமை குறித்து தஞ்சையில் நடந்த மாரத்தான் போட்டியில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டி

நம் கல்வி-நம் உரிமை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு அறக்கட்டளை நடத்திய மாரத்தான் போட்டி தஞ்சையில் நேற்று நடந்தது. தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த போட்டியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியானது 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை வழியாக வல்லத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் விளையாட்டு மைதானத்துக்கு திரும்பி வந்தனர்.

6 ஆயிரம் பேர் பங்கேற்பு

இதேபோல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு தனித்தனியாக 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் விளையாட்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவக்கல்லூரி முதலாவது நுழைவு வாயில் வரை சென்றுவிட்டு, மீண்டும் மைதானத்துக்கு திரும்பி வந்தனர்.

இந்த போட்டிகளில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் ஓடினர்.

பரிசுகள்

போட்டியில் முதல் 5 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், நெல்லை ஜீவா ஆகியோர் ரொக்கப்பரிசுகளை வழங்கினர். மேலும் 20 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் சாத்தப்பன், தஞ்சை மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சிங்காரவேலு, துணை நீதிபதி ரவி மற்றும் உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியையொட்டி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story