விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 23 Sept 2023 2:00 AM IST (Updated: 23 Sept 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘தினை மாரத்தான்’ என்ற பெயரில் மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி, திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'தினை மாரத்தான்' என்ற பெயரில் மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி, திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட சமூகநல அலுவலர் புஷ்பகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் அருள்தேவி, முதல்வர் மேரி பிரமிளா சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, தடகள சங்க தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 பெண்கள் கலை கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1,200 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் மற்றும் 3-ம் இடத்தை அந்தோணியார் பெண்கள் கல்லூரி மாணவிகளும், 2-ம் இடத்தை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி மாணவியும் பிடித்தனர். பின்னர் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் 20 மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story