விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேசிய வன உயிரின வார விழாவினையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேசிய வன உயிரின வார விழாவினையொட்டி வனத்துறை சார்பில் வனங்கள், வன உயிரினங்களை காப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி திருப்பத்தூர் அருகே ஆதியூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
7 கிலோ மீட்டர் தூரம்
போட்டியானது ஆண்களுக்கு ஆதியூரில் தொடங்கி சு.பள்ளிப்பட்டு ஊராட்சி மொளக்காரம்பட்டி, வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக சென்று ஆதியூர் வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. பெண்களுக்கு ஆதியூரில் தொடங்கி சு.பள்ளிப்பட்டு ஊராட்சி மொளக்காரம்பட்டி தனியார் கல்லூரி வழியாக சென்று ஆதியூர் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் இளங்கோ, குமார், ரமேஷ், சோமசுந்தரம், வனவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.