திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம்
அரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தர்மபுரி
அரூர்:
அரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் இந்திராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சூர்யா தனபால், முல்லை ரவி மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் எனது குப்பை எனது பொறுப்பு என முழுக்கத்தோடு முக்கிய வீதிகள் வழியாக சென்று வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பை பச்சை நிற தொட்டியிலும், மக்காத குப்பை நீல நிறம் தொட்டியிலும் போட வேண்டும். தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்கள் தனியாகவும், சேகரித்து அவற்றை பேரூராட்சி பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story