தூய்மைப்பணி விழிப்புணர்வு ஊர்வலம்


தூய்மைப்பணி விழிப்புணர்வு ஊர்வலம்
x

எட்டயபுரத்தில் தூய்மைப்பணி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். `எனது குப்பை எனது பொறுப்பு' என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமானது எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத்தொடர்ந்து சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டினர். எட்டயபுரம் பேரூராட்சியை தூய்மையான நகரமாக முன்னெடுப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story