தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
x

குத்தாலத்தில், தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் மூலமாக நீர்நிலைகளை பாதுகாத்தல், தூய்மைப்படுத்துதல், குப்பைகள் கொட்டுவதை தவிர்த்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குத்தாலம் அருணகிரி தெருவில் தொடங்கிய ஊர்வலம் கடைத்தெரு, மேலசெட்டித் தெரு, வாய்க்கால்கள் அதிகமாக உள்ள பகுதியான புதுநகர், ராமாபுரம் அக்ரஹாரம், வியாபாரசெட்டித்தெரு, எடத்தெரு, மேட்டுத்தெரு, கீழமாந்தோப்புத்தெரு, மந்தகரை, ராஜகோபாலபுரம் வழியாக அட்டக்குளத்தில் முடிவடைந்தது. மேலும் குளத்தில் சுத்தப்படுத்தி கரைப்பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத் தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் சுந்தர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பாலித்தீன் ஒழிப்பு, நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதால் ஏற்படும் தீமைகள், எனது குப்பை எனது பொறுப்பு ஆகிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.










Next Story