மின் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


மின் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x

மின் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மின் வாரிய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், எந்த நேரத்திலும் விழிப்புடன், பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து மற்றும் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி மின் விபத்து இல்லாமல் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். மின்சாதன பழுது ஏற்பட்டால் பணியாளர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விரைந்து மின்சாரம் வழங்க வேண்டும். பழுதான மின் கம்பிகள் மற்றும் தொய்வாக உள்ள மின் கம்பிகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மின்வாரிய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கூட்டத்தில் மீனாட்சி ராமசாமி கல்லூரிகளின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன், பெரம்பலூர் செயற்பொறியாளர் சேகர், அரியலூர் செயற்பொறியாளர்(பொறுப்பு) சாமிதுரை, ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மின்வாரிய பொறுப்பாளர்கள் 225 பேர் கலந்து கொண்டனர். முடிவில் உடையார்பாளையம் உதவி செயற்பொறியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story