மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்


மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி மற்றும் கவுரி ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் கல்வி முன்னேற்றத்திற்காக அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் பாதுகாப்புக்கென்று அரசு அறிவித்துள்ள சட்ட நெறிமுறைகள் குறித்தும், செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் மாணவிகளிடையே விளக்கி கூறினர்.

மேலும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினையில் இருந்து உடனடியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 1098 என்ற தொலைபேசி பயன்பாடு மற்றும் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு செயலிகள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story