பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
பறவைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
இட்டமொழி:
கூந்தன்குளம் ஊராட்சியில் சரணாலயத்துக்கு வரும் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், கிராம வளர்ச்சி குறித்தும் ஊராட்சிமன்ற தலைவர் சுதா வேல்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இயற்கை ஆர்வலரும், சிந்தாமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எம்.கே.ராமசுப்பு, நவஜீவன் அறக்கட்டளை இயக்குனர் நளன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழித்தல், வளர்ச்சி பணிகள் மற்றும் பறவைகள் பாதுகாப்புக்குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி துணைத்தலைவர் பார்வதி தளவாய்மணி, பறவை மனிதர் பால்பாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் தடிவீரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story