குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
x

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சுவேதா ராணி கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்குதல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டறிதல், குழந்தை திருமணம் பற்றி தகவல் கிடைத்தால் போலீசில் புகார் செய்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வட்டார மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விவரங்களை தகவல் பலகையில் எழுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கவும், தெருக்கூத்து மூலம் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை தத்தெடுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்சந்திரிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பிரதிநிதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சமூகநலத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மதுரைவீரன் நன்றி கூறினார்.


Next Story