விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி


விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இளைஞர்நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் ஓட்டமானது சின்னக்கடைவீதி, பட்டமங்கலத்தெரு வழியாக ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சென்றடைந்தது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மினி மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல்லாஷா, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story