பாமாயில் மர சாகுபடி குறித்து விழிப்புணர்வு


பாமாயில் மர சாகுபடி குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

பாமாயில் மர சாகுபடி குறித்து விழிப்புணர்வு நடந்தது.

கள்ளக்குறிச்சி

பகண்டைகூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமாயில் மர சாகுபடி செய்வதால் கிடைக்கும் பலன் குறித்து விழிப்புணர்வு வாகன தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு அட்மா தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு வாகனத்தை ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேசிய சமையல் எண்ணெய், எண்ணெய் பனைத்திட்டத்தின் மூலம் 2037-ம் ஆண்டு வரை பாமாயில் பழகுைழகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு முழு மானியத்தில் கன்றுகள் தருவதுடன் 4 ஆண்டு பராமரிக்கவும், 3 ஆண்டு ஊடுபயிராகவும், சொட்டுநீர் பாசனத்திற்காகவும், அறுவடை கருவிகளும் மானியத்தில் வழங்கப்படுகிறது.

இதனை வாகனம் மூலம் ஒன்றியம் முழுவதும் சென்று விவசாயிகளுக்கு விளக்கி பாமாயில் மர சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story