வம்பன் அற்புதா கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்


வம்பன் அற்புதா கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

வம்பன் அற்புதா கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி, அருகே வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், புதுக்கோட்டை வனக்கோட்டம் இணைந்து பசுமை தமிழ்நாடு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முத்துமீனா மற்றும் கணிதத்துறை பேராசிரியர் பேராமலா ஆகியோர் தலைமை தாங்கினர். மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் வான்மார்ட்டின் புதுக்கோட்டை வனக் கோட்டத்தில் பணிபுரியும் வனச்சரக அலுவலர் கார்த்திக்ராஜா மற்றும் காயத்ரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் ஆலங்குடி காமராஜர் சிலையிலிருந்து தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சந்தைப்பேட்டையில் நிறைவடைந்தது. ஊர்வலத்தை தொடர்ந்து வம்பன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கோஷங்களை எழுப்பியவாறு பசுமை தமிழ்நாடு திட்ட ஊக்குவிப்பு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மா, பலா, வேம்பு, சந்தனம், தேக்கு என 500-க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லூரி நாட்டு நலப்ப ணித்திட்ட மாணவிகள், ஆசிரியர்கள், வனக்கோட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story