விழிப்புணர்வு நிகழ்ச்சி
மரவள்ளி பயிாில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிப்பட்டு, சித்தேரிப்பட்டு, வேளானந்தல், பழைய சிறுவங்கூர், சிங்காரப்பேட்டை, சூளாங்குறிச்சி உள்பட வருவாய் கிராமங்களில் 1,200 ஏக்கர் பரப்பில் மரவள்ளி பயிர் செய்து வரும் விவசாயிகள் செம்பேன், சிலந்திப்பூச்சிகள் தாக்கத்தில் இருந்து மரவள்ளி பயிரை காப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், அலுவலர் ஷோபனா, உதவி அலுவலர் ராஜேஷ் உள்பட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மரவள்ளி வயல்களில் ஆய்வு மேற்கொண்டு பூச்சிதாக்குதலை கட்டுப்படும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story