குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:45 AM IST (Updated: 20 Nov 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நாகூர் போலீஸ நிலையத்தில் நடந்தது. அப்போது போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்தில் பயன்பாட்டில் உள்ள சமுதாய பணிபதிவேடு (சி.எஸ்.ஆர்.), மருத்துவ தகவல் பதிவேடு, குழந்தைகள் உதவி மைய பதிவேடு மற்றும் பல்வேறு ஆயுதங்கள் குறித்து நாகூர் தேசிய மேல் நிலைபள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் போக்சோ சட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கி பாலியல் வன்கொடுமை மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறை, போக்சோ சட்டம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன், பள்ளியின் ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story