லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி


லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 July 2023 3:15 AM IST (Updated: 15 July 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

காத்தாடிமட்டம் அரசு பள்ளியில் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் லஞ்சத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் முத்துராமன் வரவேற்றார். லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஆசிரியருமான மனோகரன் பேசும்போது, லஞ்சம் ஊழல் இல்லாத நாட்டில் இன்றைய குழந்தைகள் வாழ வேண்டும் என்றால், அது அவர்களால் மட்டுமே முடியும். அரசு ஊழியர்களாக இருக்கும் தங்கள் பெற்றோரிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று கூறி வலியுறுத்தினால் அது சாத்தியமாகும். எனவே, அரசு ஊழியர்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தங்கள் மீது ஆணையாக லஞ்சம் வாங்கமாட்டேன் என்று கூறி சத்தியம் செய்ய வைக்க வேண்டும். அது இளம் வயதிலேயே நாட்டுக்குச் செய்யும் பெரும் சேவையாகும். அதேபோல் வளர்ந்து அரசு அதிகாரியானால் லஞ்சம் வாங்கக்கூடாது. தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்றால் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது என்று தங்கள் பெற்றோரிடம் வலியுறுத்தி சத்தியம் பெற வேண்டும் என்றார். முடிவில் ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story