லாலாப்பேட்டையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி


லாலாப்பேட்டையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

லாலாப்பேட்டையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

லாலாப்பேட்டையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை (பொறுப்பு) காவேரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன் முன்னிலை வகித்தார்.

சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள், சமூகத்தில் அவப்பெயர் ஏற்படுவதோடு எதிர்காலம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என விளக்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவலர் குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரந்தாமன், சேட்டு, காமராஜ், செந்தில்வேலன், ஆசிரியர்கள் ஷர்புதீன், விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story