தபால் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தபால் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தபால் நிலையத்தில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஜெஸ் ரியால் நர்சரி பிரைமரி பள்ளி சேர்ந்த நான்கு வயது முதல் 8 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தபால் அனுப்புவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உலக தபால் அலுவலக தினம் வருவதையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கடிதங்கள் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க தபால் மூலம் கடிதங்கள் எழுத வைத்து மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அரசின் பொன்மகள் திட்டம், தங்கமகள் திட்டம் குறித்தும் சேமிப்பு கணக்கு தொடங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story