உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி


உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்

திருப்பூர்,

தமிழ்நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பக திருப்பூர் வனச்சரகம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 சார்பில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முன்னோட்ட நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணா தலைமை தாங்கி பேசுகையில், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பொருட்களை போடக்கூடாது. மேலும் சரணாலயத்திற்கு வரக்கூடிய பறவைகளை பாதுகாக்க வேண்டும், வருகிற ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் பறவைகளை பாதுகாக்க நாம் அனைவரும் சபதமேற்போம். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவர்கள் விழிப்புணர்வு நடனம் ஆடினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் முருகானந்தம், வெங்கடாசலம், மணிகண்டன், வெங்கடேஷ், காமராஜ் மற்றும் நாட்டுநலப்பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.




Next Story