விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x

விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம்

கமுதி

கமுதியில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். இந்த பேரணி பஸ் நிலையத்திலிருந்து தொடங்கி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேரணியை பயிற்சி கலெக்டர் நாராயண சர்மா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அன்னம்மாள், மண்டல துணை தாசில்தார் முத்துராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் மணிவல்லபன், கிராம நிர்வாக அலுவலர் செய்யது, செங்கப்படை ஊராட்சி மன்ற தலைவர் ராமு, பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், துணை தலைமை ஆசிரியர் லட்சுமணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story