மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடியில் நேரு யுவகேந்திரா, அழகப்பா பல்கலைக்கழக தேசிய மாணவர் படை, ஜான் பாவா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப், சுவாமி விவேகானந்தா இளையோர் மன்றம் ஆகியவற்றின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணியை மாங்குடி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், மாவட்ட இளைஞர் நலஅலுவலர் பிரவீன் குமார், அழகப்பா பல்கலைக்கழக தேசிய மாணவர் படை அதிகாரி வைரவ சுந்தரம், ஜான்பாவா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனர் சவுந்தர பாண்டியன், யோகா, ஸ்கில் டெவலப்மென்ட் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் சேர்மன் யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story