செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி


செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி
x

விழுப்புரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்:

44-வது செஸ் ஒலிம்பியாட்- 2022 போட்டி நடைபெற உள்ளதையொட்டி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு பேரணி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை இணைந்து நடத்திய இப்பேரணியை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி, கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுடன் பேரணியாக சென்றார்.

300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இப்பேரணியில் மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகின்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இப்பேரணியானது மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story