வில்லிவாக்கத்தில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி


வில்லிவாக்கத்தில் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
x

சென்னை வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் சார்பாக சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

சென்னை

வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணியாக வில்லிவாக்கம் நாதமுனியை சென்றடைந்தனர்.

செல்லும் வழியெங்கும் அவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது எனவும், சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் காசி விஸ்வநாதன், சக்திவேல், முரளிகுமார், டாக்டர் செல்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story